Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 16 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோசடியாளர்களைச் சுற்றி மட்டுமன்றி நல்லதொரு நாட்டுக்கான எமது குறிக்கோள்களைச் சுற்றியும் தடைகள் சூழ்ந்திருந்த போதிலும், அவையனைத்தையும் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடமிருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ராவய பத்திரிகையின் 30ஆவது ஆண்டு நிறைவையொட்டி, கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்ற அறிஞர்கள் கருத்தாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகங்களின் விமர்சனங்களுக்கு, தான் தொடர்ச்சியாக முகங்கொடுப்பதாக இதன்போது தெரிவித்த ஜனாதிபதி, அனைவரினதும் மரியாதைக்கும் நம்பிக்கைக்குமுரிய அழகிய நாட்டைக் காண்பதே தனது குறிக்கோளாகுமெனவும், அந்தக் குறிக்கோளை அடைவதற்கான பயணத்தில், ஒத்தாசையுடனும் புரிந்துணர்வுடனும் பயணித்தால், அப்பயணம் மிக இலகுவானதாக அமையுமெனவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை தான் பொறுப்பேற்றதால், நீண்டகால நண்பர்கள் பலரின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதாகவும் 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுதல் உட்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு, அதன்மூலம் கிடைத்த ஒத்துழைப்பை குறைத்து மதிப்பிட முடியாதெனவும், ஜனாதிபதி நினைவூட்டினார்.
எதிர்க்கட்சி பலமுள்ளதாக இருந்த நிலையிலேயே, ஜனவரி 8 வெற்றிக்குப் பின்னர் 100 நாட்கள் வேலைத்திட்டம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அந்தச் சவாலை வெற்றி கொள்வதற்காக, தனது கட்சித் தலைமைப் பதவி உறுதுணையாக இருந்ததனையும் மறக்கக் கூடாதெனவும், மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
4 hours ago
5 hours ago