Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாநூ கார்த்திகேசு
'வருடத்தின் ழுழு நாட்களையும் கட்சிக்காக ஒதுக்குங்கள். மே தினத்தை மாத்திரம் தொழிலாளர்களுக்காக ஒதுக்குங்கள்' என இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் தொழிற்சங்க இயக்குனருமான லெஸ்லி தேவேந்திர தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டுரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
'தற்போது தொழிற்சங்கங்களின் செயற்பாட்டில் அரசியல் தலையீடுகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றன. அவ்வாறிருக்க, இம்முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியானது காலியில் மே தினத்தை நடத்தவுள்ளது.
'இந்நிலையில் தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் 05 பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பிலான கோரிக்கையொன்றினை இம்முறை மே தினக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளோம்.
'அவையாவன, முதலாவது கோரிக்கையாக மனித வள முகாமைத்துவம் தொடர்பிலான பிரச்சினை, மகப்பேற்றின் பின்னர் பெண் ஊழியர்களுக்கான விடுமுறை குறித்து தேசிய அளவிலான விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை நிர்ணயித்தல், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (நுவுகு)இ ஊழியர் சேமலாப நிதி (நுPகு) என்பவற்றையாவது ஓய்வூதியமாக மாற்றி வழங்குமாறு கோரிக்கை விடுத்தல், அரச, தனியார் ஊழியர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதெல்லையை தீர்மானித்தல் மற்றும் வட் வரியானது பொதுமக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்காது தடுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம்.
'இதனை எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்குள் மைத்திரி தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றி வைக்கும் என நம்புகின்றேன் என்றார். (படப்பிடிப்பு: சமந்த பெரேரா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago
48 minute ago
58 minute ago