2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'தேர்தல் திகதியை குறிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை'

Kogilavani   / 2016 மார்ச் 04 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

'விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர், ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வு கூறுவோர், ஊடக நிறுவனங்கள் அல்லது வேறு எந்தவொரு நபருக்கோ, தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிப்பதற்கு அதிகாரம் இல்லை' என்று, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர், 'தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தேவையேற்படின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிப்பை விடுக்கமுடியும்.

உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலை நடத்துவது எவ்வாறு, எப்படி நடத்துவது என்று இப்போதே கூறுகின்றனர். உள்ளூராட்சிமன்றங்களுக்கான பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர், தேர்தல்கள் ஆணையாளர் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவே தேர்தல் தொடர்பில் அறிவிக்கமுடியும் என்று உள்ளூராட்சி மன்றங்களுக்கான சட்டத்தில் உள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .