2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

‘சமூகப் பிரச்சினையாக மாறிவிட்ட வலிப்பு நோய்’

Niroshini   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற வலிப்பு நோய், சமூக பிரச்சினையொன்றாக மாறியுள்ளதாக, இலங்கையின் வலிப்பு நோய் தடுப்புச் சங்கத்தின் செயலாளர் உபுல்  அபேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“வலிப்பு நோய் என்பது, மூளையின் செயற்பாடு மாற்றம் அடைந்தால் ஏற்படும் வெளிப்பாடாகும்.

"இந்த நோயினை 80 சதவீதம், மருந்தினால் குணப்படுத்த முடியும்.

"மேலும், உணவுக் கட்டுப்பாடு,மருத்துவ முறைகள், அறுவைச் சிகிச்சை மூலம் இந்நோயை கட்டுப்படுத்த முடியும். இந்த நோய், குழந்தைகளிடத்திலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. இந்த நோய் ஏற்பட்டால், உடலுக்கு அதிக தாக்கம் ஏற்படும்.

"இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு, அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.

"இந்த நோய் இருக்கும் நபர்கள், வெளியில் வராமல், வீட்டுக்குள்ளேயே காணப்படுகின்றனர். இந்த நிலைமையினை மாற்றி, இந்நோய் தொடர்பாக ​நோயளிகளுக்கு விரிவாக விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .