Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
'அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்து இடம்பெறுகிறன. சட்டம் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக நான் மட்டுமல்ல, ஜனாதிபதியும் கூறுகிறார். நாட்டில் சட்டத்தை நிலை நிறுத்த வேண்டிய நிறுவனங்கள் யாவும் அரசியல் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயற்படுகின்றன. ஜனாதிபதிக்குக் காலம் கடந்தாவது அது புரிந்துள்ளமை நல்லது' என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார்.
2002ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை (24), நீர்கொழும்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும், முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்களுக்குத் தொடர்ந்து தெரிவித்ததாவது,
'நாட்டில் தற்போது நல்லாட்சி நிலவுகிறதா? சொல்வது ஒன்று செய்வது வேறொன்று. நாங்கள் அன்று, வடக்கு மற்றும் கிழக்கில் குண்டுச் சத்தங்களை நிறுத்தியமையே நல்லிணக்கமாகும். இப்போது என்ன நடக்கிறது? அங்கும் வெடிச்சத்தம். இங்கும் வெடிச்சத்தம் கேட்கிறது. வடக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
'இந்த சம்பவம், எனது காலத்தில் இடம்பெற்றால் மஹிந்த ராஜபக்ஷ கொலை செய்தார் என்று கூறுவார்கள். இல்லையேல், மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்றதாகக் கூறுவார்கள். அதுவும் இல்லையேல், இளைஞர்களைச் சுட்டதற்காக என்மேல் குற்றச்சாட்டு சுமத்துவார்கள்' என்றார்.
மேலும், 'கோப் குழுவின் பிரச்சினை தெளிவாகத் தெரிகின்றது. இதிலிருந்து மீள முடியாமல் அவர்கள் தவிக்கின்றார்கள். தப்பிக் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் கோப் குழுவில் இருக்கிறார்கள்' என அவர் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
48 minute ago
50 minute ago