Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 07 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் உண்மையான அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாயின் அந்நாட்டிலுள்ள குடும்ப உறவுகளை மேம்படுத்துவது கட்டாயமானதாகுமெனவும் குடும்பங்களை வலிமைப்படுத்தும் பிரதான தூண்டுக்கோள்களாகப் பெண்கள் உள்ளார்களென்றும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
இலங்கை துறைமுக அதிகார சபையின் மாபொல துறைமுக மற்றும் சமுத்திரவியல் கலாசாலையின் கேட்போர்கூடத்தில் இன்று (07) நடைபெற்ற கொலந்தொட்ட மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'பெண்களுக்கு அபிமானமிகு நாளைய தினம்' எனும் தொணிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
'பெண்கள் வெளிநாடுகளில் அடிமைகளாக பணியாற்றி ஈட்டும் வருமானமே இந்நாட்டிற்கு கிடைக்கப்பெறும் அதிகூடிய வெளிநாட்டு வருமானமாகுமென ஒரு சிலர் வெட்கமின்றி கூறுகின்றார்கள். தனிப்பட்ட முறையில் பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணம் ஈட்டுவதை நான் எதிர்க்கின்றேன்.
ஒரு நாடு முன்னோக்கிச் செல்ல பணம் அவசியம் என்ற போதிலும் எங்களுடைய பெண்களை விற்று அல்லது அவர்கள் மூலமாக பணம் ஈட்டுவதை நான் முழுமையாக எதிர்க்கின்றேன்.
நாம் பெண்களின் முக்கியத்துவத்தை அறிந்துக்கொள்வது முக்கியமாகும். விசேடமாக உலக பொருளாதாரத்துடன் நாம் இசைவாக்கமடைய வேண்டும். தற்சமயம் நாம் எம்முடைய கலாசார விழுமியங்களைப் புறக்கணித்துள்ளோம்.
கடந்த காலங்களில் இந்நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரிய பொழுது, 90 சதவீதமான பெண்களே விண்ணப்பங்களை அனுப்பியிருந்தார்கள். பெண்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ளும் பொழுது நடைமுறை பிரச்சினைகளை எதிர்க்கொள்ள நேரிடும். அவர்களை இரவு வேளையில், காவலில் ஈடுப்படுத்த இயலாது. இறுதியாக பெண்களுக்கு ஒரு சில இட ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு நான் தீர்மானித்தேன். இல்லையேல் அவ்விடத்தில் பெண்களுக்கு அநீதியிழைக்கப்படும்.
இன்று பெண்கள் கல்வியறிவில் முன்னிலையில் உள்ளார்கள். நல்லதோர் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் எதிர்வரும் காலத்தில் இந்நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
2 hours ago