Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூலை 18 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜி -77 மற்றும் சீனா நாடுகளின் மாநாட்டின் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் இலங்கை அதிகபட்ச ஆதரவை வழங்கும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதி அளித்துள்ளார்.
நேற்று (17) காலை நைரோபியா கென்யாட்டா சர்வதேச மாநாட்டு மையத்தில் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை உலக நிகழ்வாக நடைபெறும் ஜி -77 மற்றும் சீனா மாநாட்டின் அமர்வின் 14 ஆவது அமைச்சர்கள் கூட்டம் இடம்பெற்றது.
இதில் இலங்கை சார்பாக கலந்துக்கொண்டு இலங்கையின் அறிக்கையினை தாக்கல் செய்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், நாங்கள் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டொஹா- கட்டாரில் சந்தித்தோம். ஆனால், பெரியளவில் மாற்றம் எதுவும் தென்படவில்லை. வல்லமைமிக்க பொருளாதாரம் மற்றும் நிதி சவால்கள் மீது எங்களது கவனம் உள்ளது.
உலக நிலைமைகளால் உருவாக்கப்பட்ட பொருளாதார வர்த்தகம், நிதி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இன்று அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் குறிப்பாக, இன்னும் சவால்கள் நிறைந்ததாக தொடர்ந்து காணப்படுகின்றது.
இந்தப் பின்னணியில் நம்மிடையே காணப்படுன்ற எதிர்பாராது நல்லிணக்கம், ஒற்றுமை, நிலையான அபிவிருத்தி மற்றும் சமாதானம் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்ளவது மட்டுமன்றி, தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சாவல்களை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதனை சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
குறிப்பாக, 2030ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் 2015ஆம் ஆண்டு எட்டப்பட்ட இலட்சிய கூட்டு விளைவுகளான அடிஸ் அபாபா அதிரடி நிகழ்ச்சி நிரலின் அபிவிருத்திக்கான நிதி, செண்தை கட்டமைப்பின் பேரழிவு அபாயம் குறைப்பு, பாரிஸ் ஒப்பந்தத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கென்யாவில் நடைபெற்ற 10 வது சர்வதேச வர்த்தக அமைப்பின் அமைச்சர்களின் கூட்டம் என்பன அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மத்தியில் வாய்ப்புகளையும் சவால்களையும் உருவாக்கியது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் இந்த சவால்களை கையாள்வதென்றால் தங்களது தேசிய அபிவிருத்தி முயற்சிகளை ஆதரிக்கும் சூழலை உறுதி செய்ய வேண்டும். இந்த சூழலில், இருதரப்பு பின்னணியில் போதுமான கொள்கை இடைவெளி, கொள்கை நெகிழ்வு மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்வேறு கொள்கை வாய்ப்புக்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு மிக முக்கியமாகும்” என்றார்.
“வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளானது, சர்வதேச முதலீட்டு ஒப்பந்தங்களின் வளர்ச்சி பரிமாணத்தை மேம்படுத்த, சர்வதேச முதலீட்டு ஆட்சியை சீரமைக்க, அங்கீகரிக்க முதலீட்டாளரின் உரிமைகள் மற்றும் கடமைகள் இடையே ஒரு உறுதியான சமநிலையினை பேணல் மற்றும் பொது நலனை கட்டுப்படுத்தல் இபாதுகாத்தல் ஆகியவற்றின் மீதும் முக்கிய பங்குவகிக்கின்றது.
ஜி -77 மற்றும் சீனா நாடுகளின் மாநாட்டின் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கு இலங்கை அதிகபட்ச ஆதரவை வழங்கும். 2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் பலப்படுத்துவதில் இலங்கை அடைந்திருக்கும் முன்னேற்றங்களுக்கான ஒரு திறந்த அங்கிகாரமாகும். பொருளாதார ரீதியாக மிகவேகமாக வளர்ச்சியடைந்துவரும் நாடாகவும் இலங்கை கருதப்படுகின்றது” எனவும் தெரிவித்தார்.
37 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago