2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'உண்மையான பட்டியலை ஏற்காவிடின் வேலை நிறுத்தம்': வைத்தியர்கள் எச்சரிக்கை

Princiya Dixci   / 2016 ஜூன் 03 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு

உள்ளகப் பயிற்சி பெற்ற அதிகாரிகளை நியமித்தல் தொடர்பான உண்மையான பெயர்ப் பட்டியலை இணையத்தளத்தில் தரவேற்றாதுவிடின், நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்போம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.

'இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இணைந்து தயாரித்த பெயர் பட்டியலே சரியானது. அதனை இணையத்தளத்தில் ஏற்றாது வேறு பெயர் பட்டியலே ஏற்றப்பட்டது. அதற்கான தவறைச் சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள அரசாங்க மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் பிரகாரம், முறையான பெயர்ப்பட்டியலை, உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு சுகாதார அமைச்சு இணங்கியது. அவ்வாறே தரவேற்றப்படாவிடின், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் வைத்தியர்கள் இறங்க வேண்டிவரும் என்றும் அம்முடிவு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக்கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

'பெயர்ப் பட்டியல் விவகாரம் மற்றும் அரசாங்க மருத்துவ சங்கத்தின் கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரான சதுர சேனாரத்ன ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிட உள்ளோம்' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .