2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்த இளைஞன் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

மோட்டார் சைக்கிளில் ஹெரோய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த 22 வயதுடைய இளைஞனை, அளுத்கம விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் நேற்று மாலை (26) கைதுசெய்துள்ளனர்.

தர்காநகர்-போன்பிட்டிய பிரதேசத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனைச் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ள மேற்படி சந்தேக நபர், ஹெரோய்ன் போதைப்பொருளை மிகவும் சூட்சுமமானமுறையில் மோட்டார் சைக்கிளில் மறைத்து கொண்டுசென்றபோது, விசேட அதிரடிப்படையினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர், வெலிப்பன்னை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்குச் சென்று போதைப்பொருள் விற்பனைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 3,880 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபரை, இன்று (26) நீதிமன்றில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X