2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

விற்பதற்காகவிருந்த வானை கடத்திச் சென்றவர் சிக்கினார்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகஹதென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 18 ஆம் கட்டை, வெதிவத்த  பகுதியிலுள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வானை வாங்க வருபவர்கள் போல வந்துவிசாரித்து, வானை கடத்திச் சென்ற இருவரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12) இரவு 7.15 மணியளவில்; இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய  மற்றையவர் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

பத்திரிகையில் வழங்கப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்து, வான் வாங்க வந்திருப்பதாகவும், குறித்த வானை செலுத்தி பார்க்க விரும்புவதாகவும் குறித்தநபர்கள் தெரிவித்துள்ளனர். 

அவர்களின் பேச்சை நம்பி வானை செலுத்தி பார்பதற்கான ஒழுங்குகளை செய்து கொடுத்ததுடன், செலுத்தி பார்க்கும் சந்தர்ப்பத்தில் வானின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் வானில் சென்றிருந்தனர். 

சிறிது தூரம் சென்றபின் வானை ஓட்டிச்சென்றவர், குறித்த வண்டியின் பின்னால் உள்ள டயரில் ஏதோ பழுதுள்ளதாக கூறியுள்ளார்.

அதனை பார்ப்பதற்காக மகன் இறங்கியுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் உரிமையாளருடன் வாகனை அந்த சாரதி கடத்திசென்று உரிமையாளரை மொஹுவ மீகஹதென்ன வைத்தியசாலைக்கு அருகாமையில் இறக்கிவிட்டுச் தப்பிச்சென்றுள்ளார்.

உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு இணங்க குறித்த வானை கடத்தி சென்றவர்களில் ஒருவரை கொஸ்கொடஹ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதுடன், வானையும்; கைப்பற்றியுள்ளனர்.  

கைது செய்யப்பட்டவர் 23 வயதானவர் எனவும் அவரை மதுகம நீதவான் நீதிமன்றத்தில் நாளை புதன்கிழமை ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .