2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வியாபார முயற்சியாளர்களுக்கான கருத்தரங்கு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய வியாபார முயற்சியொன்றைத் தொடங்குபவர்கள், முயற்சியாண்மை ஆர்வமுடையவர்கள் மற்றும் வியாபாரத்தை நடத்தி செல்பவர்களின் நம்மை கருதி கருத்தரங்கொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தரங்கு, பம்பலப்பிட்டி - பௌத்தாலோக மாவத்தையிலுள்ள குவுஆளு புடழடியட யுஉயனநஅல கல்வி நிறுவனத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி பிற்பகல் 3.30 மணி தொடக்கம் 6.30 மணி வரை நடைபெறவுள்ளது. 

தொழில் முயற்சியாளர்கள் நாளுக்கு நாள் எதிர்கொள்ளும் சவால்களைப் பகிர்ந்து மற்றவர்களின் அனுபவ ரீதியான தீர்வுகள் மற்றும் நுட்பங்களை இக்கலந்துரையாடலில் கலந்துகொள்வதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். 

இக்கருத்தரங்கில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களான அ.துசியந்தன், கு.சிவராம், கு.ரமேஷ், பே.சுதாகரன் , கு.மிதுலா ஆகியோர் வியாபார நுணுக்கங்களை தமிழில் பகிரவுள்ளனர். 

இலவசமாக நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பங்குபெற விரும்புவோர் - 0773461479 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .