Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது, இரண்டு போக்குவரத்து பொலிஸார் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, சாரதியை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.குணதாச ஞாயிற்றுக்கிழமை (30) உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு, பிட்டிபனையில் கடந்த சனிக்கிழமை (29) இடம்பெற்ற விபத்தின் போது, மோட்டார் சைக்களில் வந்த இரண்டு பொலிஸாரை, காரொன்று மோதி விபத்துக்குள்ளாக்கியது. விபத்தை ஏற்படுத்திய காரைச் செலுத்தி வந்த சாரதியான ஹர்ஷ இந்திரஜித் வடுகே என்ற சாரதி, இந்தச் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டார்.
விபத்து ஏற்பட்ட போது, குறித்த சாரதி அதிக மதுபோதையில் இருந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த விபத்தின் போது, ஆணமடுவையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அசோக்க லலித் யசநாயக்க (39 வயது), தங்கொட்டுவையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த பண்டார (32 வயது) என்ற இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உயிரிழந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
8 hours ago
28 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
28 Jul 2025