2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2016 நவம்பர் 22 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் பாலாவி எருக்கலம்பிட்டி புஹாரிய்யா அரபுக் கல்லூரியில் 2017ஆம் ஆண்டுக்கான ஷரீஆப் பிரிவுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஷரீஆப் பிரிவுக்காக சேர்த்துக்கொள்ளப்படவுள்ள மாணவர்கள் அல் குரானை சாரளமாக ஓதக்கூடியவராகவும் 13 வயது பூர்த்தியடைந்திருப்பதுடன், 15 வயதுக்கு உட்பட்டவராகவும் தேக ஆரோக்கியம், நல்லொழுக்கம் மற்றும் விவேகம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

குறித்த பிரிவில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்கள் ஷரீஆப் பாடங்களைக் கற்பதுடன், ஏழு வருடங்களுக்குள் புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தல், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம், அல்ஆலிம் பிரிவு 1, பிரிவு 2, தகவல் தொழில்நுட்பம், மொழிசார் பயிற்சிகள், சுய தொழில் பயிற்சி வகுப்புக்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

எனவே, குறித்த அரபுக் கல்லூரியில் ஷரீஆப் பிரிவில் கற்க விரும்பும் மாணவர்கள்  அதிபர் அல்லது தலைவர் புஹாரிய்யா அரபுக் கல்லூரி, நாகவில்லு, பாலாவி எனும் முகவரியுடனோ அல்லது 032-2269450 071-0846561 எனும் தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொள்ள முடியும்.

அத்துடன், விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும்.

நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10ஆம், 11ஆம் திகதிகளில் காலை 9 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .