Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் கலை மகள் விழா போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டம் மற்றும் வடமேல் மாகாணத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் மத்தியில், சமய அறிவையும் நாவன்மை, மனனஞ் செய்யும் திறன் போன்றவற்றையும் வளர்க்கும் வகையில், வருடந்தோறும் நாவன்மை, கட்டுரை, ஓவியப் போட்டிகளை, இந்து இளைஞர் மன்றம் நடத்தி வருகிறது.
பாலர் பிரிவு, கீழ்ப் பிரிவு, மத்திய பிரிவு, மேற் பிரிவு என நான்கு பிரிவுகளாக, நாவன்மைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
கட்டுரைப் போட்டிகள் மத்திய பிரிவு, மேற் பிரிவு, உயர்தரப் பிரிவு என மூன்று பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன.
ஓவியப் போட்டிகள் தரம் 1, தரம் 2க்கு ஒரு பிரிவாகவும் மற்றும் தரம் 3, தரம் 4க்கு ஒரு பிரிவாகவும் நடத்தப்படவுள்ளன.
போட்டிகள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி காலை 9 மணி முதல் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
விண்ணப்பங்களை, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு, மன்றத்தின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .