Editorial / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்ணம்
நாட்டில் தற்போது நிலவிவரும் வரட்சியின் காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹள, மத்துகம, அகலவத்தை, ஹொரணை பகுதிகளிலுள்ள சிறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சிறு தேயிலைத் தோட்டத் உரிமையாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.
கடும் வரட்சி நிலவுவதால், சிறு தேயிலைத் தோட்டங்களில் கொளுந்து பறிக்கும் தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, அவர்கள் நாளாந்தம் ஒரு தொகை கொளுந்தை பறித்தாலே அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படும். எனவே, தற்போது வரட்சி நிலவுவதால் அவர்களால் குறிப்பிட்ட தொகை கொளுந்தை பறிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. நாளாந்த சம்பளத்துக்கு தொழில் செய்துவரும் தொழிலாளர்கள் வருமானம் இன்றி பெரும் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை, சிறு தேயிலைத் தோட்டத் உரிமையாளர்களும் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். வரட்சி தொடரும் பட்சத்தில், தேயிலைச் செடிகள் கருகி இறந்துவிடுமானால், மாற்றுப் பயிர் செய்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், தேயிலையை மீள் பயிரிடக் கூடிய பொருளாதார வசதி இன்மையால், தேயிலைப் பயிர்ச்செய்கையை கைவிட வேண்டிய நிலை உருவாகலாம் என, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago