2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு

Princiya Dixci   / 2017 மார்ச் 01 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள இருதய நோய் பிரிவுடன் இணைந்த முழு வசதிகளைக் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாண வேலைகளை விசேட திட்டமாக கருதி விரைவாக ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன, உரிய தரப்புகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தத் திட்டத்தின் செயற்பாடுகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்படி ஆலோசனையை வழங்கினார்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள இருதய நோய் பிரிவுடன் இணைந்த முழு வசதிகளைக் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு பத்து மாடிகளைக் கொண்டதாகும். அவற்றில் 04 மாடிகள் இருதய நோய் தொடர்பிலும், 03 மாடிகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கும், 02 மாடிகள் புதிதாக பிறக்கும் பிள்ளைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவுக்கும், மேல் மாடி பணிக்குழுவினரின் பயிற்சிக் கருத்தரங்குகளுக்காகவும் ஒதுக்கப்படவுள்ளன.

இலங்கையில் ஆண்டுதோறும் 370,000 அளவிலான பிறப்புக்கள் நிகழ்கின்றன. சிசு மரணங்கள் 3,000 ஆகும். ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் இறப்பு வீதம் 1000க்கு 10 ஆக வருடாந்தம் 3,700 நிகழ்கிறது. பிறப்பிலான இருதயநோய், நிமோனியா, குருதி கடுமையாக விஷமடைதல் மற்றும் உடலுறுப்புக்கள் செயலிழத்தல் போன்றவற்றை இந்த மரணங்களுக்கு காரணங்களாக கூறலாம்.

அத்துடன், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் வெளிவாரி நோயாளர் பிரிவுக்கு 3,000க்கு மேற்பட்ட நோயாளிகள் நாளாந்தம் வருவதுடன், அவர்களில் 900 வரையானோர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.

வாழ்க்கைக்கும் மரணத்துக்குமிடையில் போராடும் ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்றும் வசதிகளுடனான கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், இலங்கை சிறுவர் மருத்துவ நிபுணர் சங்கத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி லக்குமார் பெர்ணான்டோ மற்றும் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .