Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 15 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லியனகேமுல்ல பிரதேசத்தில், நேற்று (14) இரவு 11.50 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஜீப் வண்டி ஒன்று சேதமாகியுள்ளது.
இது தொடர்பில், ஜீப் வண்டியின் உரிமையாளர் சீதுவை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து, சீதுவை பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் தெரிவித்ததாவது,
ஜீப் வண்டியின் உரிமையாளரான விபுல் சமித் பெரேரா (34 வயது) என்பவர், சீதுவை கற்பிட்டியிலிருந்து லியனகேமுல்லயில் உள்ள தனது வீட்டுக்கு ஜீப்பில் வரும் போது, லியனகேமுல்ல பிரதேசத்தில் வைத்து, காரில் பின்தொடர்ந்து வந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜீப் வண்டியின் உரிமையாளர் தனது வீடு அமைந்துள்ள ஹீரியாகஹ லிந்தபார என்ற வீதிக்கு வண்டியைச் செலுத்தும்போது, துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முறைப்பாட்டாளர் ஜீப் வண்டியை செலுத்தும் போது வாகனத்தில் பின் டயர்களில் ஒன்றில் காற்று போயிருப்பதை உணர்ந்துள்ளார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வாகனத்தின் பிற்பக்கத்திலும் இலக்கத் தகட்டிலும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதை அவதானித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக அவர் 119 அவசர இலக்கத்துக்கு அறிவித்ததுடன், சீதுவை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். சீதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஞ்சு விக்ரமசிங்க தலைமையிலான பொலிஸார், சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி கமெராவில் உள்ள காட்சிகளையும் பார்வையிடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
28 minute ago
38 minute ago