2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Princiya Dixci   / 2016 ஜூலை 14 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் நிமல் லான்ஸா தொடர்ந்த அவதூறு வழக்கு நேற்று புதன்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி வரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த ஒத்திவைத்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றின் போது பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பிரதி அமைச்சர் நிமல் லான்ஸாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசியதாக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்குப் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆஜராகவில்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூட்டத்தில் பேசிய ஒலிப்பதிவு  நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த உரையில் மக்கள் நலன் சார்ந்த விடயம் உள்ளடங்கியுள்ளதாகவும் எனவே, இந்த ஒரு நபருக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையிலான விடயம் அதில் உள்ளடங்கவில்லை எனவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதஙகளின் பின்னர் வழக்கை செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதிக்கு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .