Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2017 ஜனவரி 26 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
பிபில, மெதகமப் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையின் தன்னியக்கப் பணப்பரிமாற்று (ஏ.ரி.எம்) இயந்திரத்தை உடைத்து, 57 இலட்சம் ரூபாயுக்கு மேற்பட்ட பணத்தைக் கொள்ளையிட்ட நபர்களில் மூவரை, நீர்கொழும்பு சட்டத்தை நிலை நிறுத்தும் பொலிஸ் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒரு தொகைப் பணத்தையும் கொள்ளைச் சம்பவத்துக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்ததாவது,
கடந்த 20ஆம் திகதி, பிபில - மெதிகம பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளையின்; ஏ.ரி.எம். இயந்திரத்தை உடைத்து 50 இலட்சம் ரூபாயுக்கு மேற்பட்ட பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மெதகம பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, கொள்ளைச் சம்பவத்துக்குப் பயன்படுத்திய வாகனத்தின் இலக்கத்தை வைத்து, அந்த வாகனம், நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாகனம் என்பதை அறிந்துள்ளனர்.
இது தொடர்பாக நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தஸநாயக்கவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளைச் சம்பவத்துக்குப் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வாகனம், நீர்கொழும்பு நகரில் வாடகைக்குப் பெறப்பட்டு கொள்ளைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக, விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள், வாகனத்தில் சென்று வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளமையும், வங்கியில் உள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுப்பதற்கு வேல்டிங் உபகரணத்தைப் பயன்படுத்தியுள்ளமையும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாணைகள் இடம்பெற்று வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago