Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Niroshini / 2016 மே 06 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.நிரோஷினி
தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் அரசாங்கம் பாடசாலை மாணவர்களை முன்னிலைப்படுத்தி 14 வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கம் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் 'மாணவர் வாழ்வுக்கு ஒரு புதிய அர்த்தம்' எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (05) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய நல்லிணக்கத்தை பாடசாலையில் இருந்து ஆரம்பிக்கும் ஓர் ஆரம்ப நடவடிக்கையாக இந்நிகழ்ச்சித்திட்டம் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
ஆக்கங்களை சமர்ப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அவர்களின் கரங்களினால் மேற்கொள்ளப்பட்டதுடன் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒல்லாந்து நாட்டின் மாணவி ஒருவரால் வடிவமைக்கப்பட்ட ஓவியக் கண்காட்சியை பார்வையிடும் நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றார். 'மாணவர் வாழ்வுக்கு ஒரு புதிய அர்த்தம்' நிகழ்ச்சித்திட்டத்தின் கீதம் உள்ளடங்கிய இருவட்டு தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி அவர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தஇ கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் ஆகியோரும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
அவர் மேலும் கூறுகையில்,
யுத்தத்துக்குப் பிற்றப்பட்ட காலப்பகுதியில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் அவை மந்தகதியிலேயே அடம்பெற்றன. ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஓர் கட்டமாக எமது அமைச்சின் கீழ் பாடசாலை மாணவர்களை முன்னிலைப்படுத்தி 14 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மாணவர்கள் சுதந்திரமாக வாழக்கூடி சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். பிற மதங்களை மதித்து வாழவேண்டும். அவர்களிடையே இன ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு அனைவரிடத்திலும் ஒரே சிந்தனை இருக்க வேண்டும். இதனை கருத்திற்கொண்டே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றன.
மாணவர்களின் சக்தியை ஜனாதிபதி அறிந்து வைத்துள்ளார். இதற்காக பல்லேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றார்.
மேலும், சகல மதங்களும் அறநெறிபாடசாலைகளை நடத்த வேண்டும். அறநேறி பாடசாலைகள் மூலமே நல்ல விழுமியங்கள் ஏற்படுத்தப்படும். இது குறித்து ஜனாதிபதியிடமும் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago