2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

“மைனாகோகம” பற்றி​ எரிகிறது: இரும்பு கம்பிகளுடன் அட்டகாசம்

Editorial   / 2022 மே 09 , பி.ப. 12:46 - 0     - 359

அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த “மைனாகோகம“ மீதும் கூடாரங்களின் மீதும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

அட்டாகாசத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கூடாரங்களை பிய்த்து எறிந்து, தீ மூட்டி கொளுத்தியுள்ளனர். இதனால், அப்பகுதி எங்கும் கரும்புகையால் மூடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாள்கள், இரும்பு கம்பிகள் மற்றும் குண்டாந்தடிகளை ஏந்தியவாறு ரகளையில் ஈடுபட்டு, அடாவடித்தனங்களை காண்பித்துள்ளனர். அக்குழுவைச் சேர்ந்த இன்னும் சிலர், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X