Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஜூலை 04 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான மத்துகம நகரில் தமிழ் பாடசாலை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் சமர்பித்திருந்த அமைச்சரவை பத்திரத்தை, இன்று (4) அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
இது பற்றி அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கையில்,
“மத்துகமை நகரிலிருந்து 600 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள நமுனுக்கொல தோட்ட நிறுவனத்தின் யடதொல தோட்டத்தின் மத்துகம பிரிவின் 5 ஏக்கர் காணியை சுவீகரித்து, அவ்விடத்தில் இந்தப் பாடசாலையை அமைக்க அமைச்சரவையிடம் நான் அனுமதி கோரியிருந்தேன். இதற்கான அனுமதியை இன்று கூடிய அமைச்சரவை வழங்கியுள்ளது.
“எனது வேண்டுகோளின்படியும் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானத்தின்படியும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரும், நண்பருமான மஹிந்த சமரசிங்கவும் இந்த அமைச்சரவைப் பத்திரத்தில், எனது அமைச்சுடன் இணைந்து கூட்டு அமைச்சரவைப் பத்திரமாக கருதி கையெழுத்திட்டிருந்தார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .