2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மகள்களை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்

George   / 2015 ஒக்டோபர் 18 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது இரண்டு மகள்களை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக கூறப்படும் தந்தையை, 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் பி குமார நாயக்க, வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டுள்ளார்.

நீர்கொழும்பு ஏத்துக்கால பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், மீனவர் எனவும் அவரது மனைவி ( 37 வயது) ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுபவர் எனவும் கூறப்படுகின்றது.

இவர்கள் இருவருக்கும் 13 வயது மற்றும் ஏழு வயதில் இரு மகள்மார்கள் உள்ளனர்.  இவர்கள் பாடசாலை மாணவிகளாவர்.
சந்தேகநபரான தந்தை, ஏழு வயது மகளை துஷ்பிரயோகம் செய்வதை மூத்தமகள் கண்டு தனது தாயிடம் கூறியுள்ளார். 

இதனையடுத்து, இது தொடர்பாக சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவில், தாயார், முறைப்பாடு செய்ததையடுத்து,  குறித்த நபரை கைது செய்த பொலிஸார் சிறுமிகள் இருவரையும் நீர்கொழும்பு  மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, 13 வயது  சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டுள்ளமையும், ஏழு வயது சிறுமி கடுமையான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமையும் வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .