2025 பெப்ரவரி 19, புதன்கிழமை

மகளை கேலி செய்தவரை குத்திக்கொன்ற தந்தை

Editorial   / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:05 - 0     - 103

தன்னுடைய இரண்டாவது மகளை கேலி, கிண்டல் செய்த 21 வயதான இளைஞனை, அந்த யுவதியின் தந்தை கத்தியால் நெஞ்சிலேயே குத்திக்கொன்ற சம்பவமொன்று கிரேண்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர், தலைமறைவாகியிருந்த நிலையில் திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். குத்திக்கொலைச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் சம்பவம் இடம்பெற்றபோது அவர், உடுத்தியிருந்த ஆடையையும் கைப்பற்றியுள்ளனர்.

கத்தி குத்து நடத்திய சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவருடைய நண்பரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​சம்பவம், கொழும்பு, இரண்டாம் நவகம்புர பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பரமானந்தா தினேஷன் (வயது 21) என்ற இளைஞனே பலியாகியுள்ளார் என்று தெரிவித்த கிரேண்பாஸ் ​பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X