2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பொலிஸாரின் விசேட தேடுதலில் 124 ​பேர் கைது

George   / 2017 மார்ச் 13 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட வேலைத்திட்டத்தில் 124 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 2 சந்தேகநபர்கள், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 20 பேர், ​போதைபொருளுடன் 5 பேர் மற்றும் 97 சந்தேகநபர்கள் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த வேலைத்திட்டத்தில் 323 பொலிஸார் பங்கேற்றதுடன், 951 வாகனங்கள் மற்றும் 498 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .