2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

புலி - மஹிந்த ஒப்பந்தம்: விசாரணைகள் இடம்பெறலாம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டியேற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவினால் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின்போது பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது தடைவிதிக்கப்பட்டிருந்தது. அத்துடன், பல நபர்களும் இத்தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 8 அமைப்புகள் மீதான தடையும் 267 நபர்கள் மீதான தடையும் அண்மையில் அரசாங்கத்தினால் நீக்கப்பட்டிருந்தது. 

தடைவிதிக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் உடன்படிக்கைககள் செய்துகொள்ளப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இங்கு குறிப்பிட்டனார். எனினும், 2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .