Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Kogilavani / 2017 மார்ச் 28 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில மேற்கத்தேய நாடுகளால் ஆதரவளிக்கப்படும் போர்க் குற்றச்சாட்டு விசாரணைகளால், இலங்கையின் பிரதான இரு இனங்களுக்கிடையிலான வேறுபாடுகளே அதிகரிக்குமெனவும், இனங்களை அவை ஒன்றிணைக்காது எனவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளர்.
2015ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, முழுமையாக அமுல்படுத்துவதற்கு, இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் வழங்கப்பட்ட சில நாட்களிலேயே, கோட்டாபய ராஜபக்ஷவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு, கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே, அவர் இக்கருத்துகளை வெளியிட்டார்.
"இனங்களை ஒன்றிணைக்கும் அதே நேரத்தில், விசாரணைகள் பற்றியும் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றியும், நீங்கள் எவ்வாறு கதைக்க முடியும். இவ்வாறான எல்லாவற்றையும் செய்யும் போது, மக்களை நீங்கள் பிளவுபடுத்தவே முயல்கிறீர்கள். அவ்வாறு நீங்கள் சிந்தித்தால், நல்லிணக்கமென்பதே இருக்காது.
"போரொன்றின் பின்னால், நாங்கள் என்ன செய்ய முடியும். பின் சென்று, இவ்விடயங்களை எல்லாம் கூறிக் கொண்டிருப்பது, சமூகங்களை ஒருபோதும் ஒன்றிணைக்காது. மாறாக, இடைவெளியை அதிகரிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
போர்க்குற்ற விசாரணைகள் குறித்துத் தமிழர்கள் கதைக்கும் போது, பௌத்த பிக்குகளினதும் பொலிஸ் அதிகாரிகளினதும் படுகொலைகள், போர்க் காலத்தில் தாங்கள் சந்தித்த ஏனைய கொடுமையான நினைவுகள் ஆகியவற்றை, சிங்கள மக்கள் கதைக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். இந்த நிலை, குணப்படுத்தும் செயற்பாட்டை மெதுவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago