2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பெயர் பட்டியல் அடங்கிய கடிதம் கையளிப்பு

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இசெட்.சாஜஹான்

சர்வதேச மனித உரிமை தினமான நேற்று வியாழக்கிழமை, ஊடக சுதந்திரம் தொடர்பான செயற்பாட்டுக்குழுவின் முக்கிய உறுப்பினர்கள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  ருவன் குனசேகரவிடம் இலங்கையில் காணாமல் போன ஊடகவியலாளர்கள், கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் 44 பேரின் பெயர்ப்பட்டியல் அடங்கிய கடிதத்தை கையளித்தனர்.

பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பதற்காகவே இந்த கடிதம் பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு வழங்கப்பட்டது.
பொலிஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள், தமது பிரதேசங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துக் கூறினர்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஏனைய  பிரச்சினைகள் தொடர்பாக அடுத்த வருட ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் விசேட சந்திப்புக்களை ஏற்படுத்துவதாகவும் அதற்கு ஊடகவியலாளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .