2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

புனித மக்காவுக்கு மேலும் 100 யாத்திரிகள் பயணம்

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும்,இமாம்களுக்கான இலவச உம்றா யாத்திரை வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட, 100 யாத்திரிகர்கள் புதன்கிழமை (04) புனித மக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுள்ளனர்.

ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மற்றும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம் ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இவர்களை அனுப்பி வைத்தனர்.

ஏற்கெனவே முதலாவது தொகுதியில் 100 பேர் கொண்ட யாத்திரை அணியினர் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்படதக்கது.
மீதமுள்ள மேலும் 300 உம்றா யாத்திரிகள்  ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள புனித றமழான் நோன்புக்கு முன்னர் உம்றாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.

இதில் ஸ்ரீலங்கா ஹிரா பவுன்டேஷன் ஏற்பாட்டில் 55 வயதுக்கு மேற்பட்ட முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் 500 பேருக்கு இலவச உம்றா வேலைத்திட்டம் அமுலாகிறது.

 'இதுவரைக் காலமும் உம்றா  அல்லது ஹஜ் கடமையை செய்யாத உலமாக்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு உம்றா  ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஹிறா பவுன்டேஷன் முன்வந்துள்ளது. இச்சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .