2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

போதைப்பொருள் வைத்திருந்த நால்வர் கைது

Gavitha   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸ்ஸை, வெள்ளவத்தை, வாழைத்தோட்டம், ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புச் சம்பவத்தின் போது, 20 கிராமும் 790 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில், மூவரையும், மாளிகாவத்தையில் கஞ்சா போதைப்பொருள் 1 கிலோகிராம் 100 கிராம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவரையும்  நேற்று வெள்ளிக்கிழமை (07)  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சுற்றிவளைப்பின் போது, அக்குரஸ்ஸை பகுதியிலிருந்து 10 கிராம் 340 மில்லிகிராம், வெள்ளவத்தையில் இருந்து 8 கிராம் 150 மில்லிகிராம், வாழைத்தோட்டத்திலிருந்து 2 கிராம் 300 மில்லிகிராம், எடைகொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், வெலிகம, வெள்ளவத்தை, வாழைத்தோட்டம்  ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 46,21,50 வயதானவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்கொண்டு மாளிகாவத்தை பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 1 கிலோகிராமும் 100 கிராம் எடைகொண்ட கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர், 26 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என அறியக்கிடைத்துள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .