Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Gavitha / 2016 மார்ச் 01 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
மன்னார் வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட புத்தளம் அல்காசிமி சிட்டி கிராமத்திலுள்ள றிசாத் பதியுதீன் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தளபாடங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த பாடசாலைக்கு புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கதிரை மற்றும் மேசைகளை அவர்களுடைய பெற்றோர்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலையானது, வடமாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் வந்ததனால், மாகாண கல்வித்திணைக்களம் மற்றும் வலயக் கல்வி அலுவலகம் என்பன பாடசாலை அபிவிருத்தியில் புறக்கணிப்பு செய்து வருவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
எனவே, இதுகுறித்து வடமாகாண கல்வித் திணைக்களம், மன்னார் வலயக் கல்வி அலுவலகம் என்பன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
17 minute ago