2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பேருவளையில் டெங்கு ஒழிப்பு தீவிரம்

Editorial   / 2017 ஜூலை 03 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார், துஷித குமார டி சில்வா

பேருவளைப் பகுதியில் தீவிரமாகத் தலைதூக்கியுள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பகுதியினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் பங்களிப்புடன், களுத்துறை தேசிய சுகாதார மற்றும் விஞ்ஞான நிறுவனத்தினர் டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சீனன்கோட்டைப் பகுதியில் புகை விசிரும் பணி மேற்கொள்ளப்பட்டதோடு, வீடு வீடாகச் சென்று டெங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சீனன்கோட்டை மக்கள் வழங்கிய பூரண ஒத்துழைப்பு குறித்து களுத்துறை தேசிய சுகாதார மற்றும் விஞ்ஞான நிறுவனத்தினர் பாராட்டுத் தெரிவித்தனர்.

சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசல் முற்றவெளியில், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வு, நேற்று இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .