2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

பாற்சோறு உண்டு மகிழ்கையில் ; நாங்கள் போராடியவர்கள்

Freelancer   / 2022 ஜூன் 25 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலிமுகத்திடல் போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம். ஆனால், போராட்டத்தை நாம் அங்கிருந்து கற்றோம் என நீங்கள் நினைக்க கூடாது.

நீங்கள் பாற்சோறு உண்டு கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள் நாங்கள். நாம் மதவாதத்தால், இனவாதத்தால், அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட்டுவரும் ஓரினம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்  எம்.பி நினைவூட்டினார்.

இந்த அநீதிகளுக்கு எதிராக நாம் இன்று, நேற்றல்ல, பல்லாண்டுகளாக  போராடி வருகிறோம். நாம் எப்போதும் ஜனநாயக போராளிகள்தான். அரசியலில் இருந்து மதம் அகற்றப்பட வேண்டும். இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும். அதுவரை எம் ஜனநாயக போராட்டம் தொடரும் என்றார். 

கொழும்பு பத்தரமுல்லை இம்பீரியல் மொனார்ச் விடுதியில் நேற்று (24) நடைபெற்ற 'சீர்திருத்தத்திற்கான கூட்டு' என்ற சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஓமல்பே சோபித தேரர் உட்பட மதத்தலைவர்கள், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,  தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் கலந்துக்கொண்ட கலந்துரையாடலில் உரையாற்றிய  மனோ எம்பி மேலும் கூறியதாவது;    

225 பேர் கொண்ட பாராளுமன்றம் என்ற சொற்பதம் இங்கே ஏற்பாட்டாளர்களினால் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.

அந்த கும்பலில் எங்களை போடாதீர்கள். இந்த கோட்டாபய  அரசாங்கத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. நாம் எப்போதும் இந்த ராஜபக்‌ஷர்களை எதிர்த்தே வந்துள்ளோம். நாங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள்.  நீங்கள் சொல்லும் அந்த 225 பேர் வேறெங்கோ இருக்கிறார்களோ எனக்கு தெரியவில்லை. நான் அந்த கும்பலில் இல்லை என்பது எனக்கு தெரியும் என்றார். 

நான் மக்களுடனேயே இருக்கிறேன். நான் கட்சி மாறி சோரம்போன அரசியல்வாதி இல்லை.   காலிமுக திடல் போராட்டத்தை நாம் கொள்கை ரீதியாக ஆதரிக்கிறோம்.

'கோட்டா கோ ஹோம்' என்ற கோஷத்தை நாம் ஆதரிக்கிறோம். ஆனால், அதற்காக இங்குள்ள பலரை போல நாங்களும், 'கோட்டா கோ ஹோம்'  என்ற கோஷத்தை, காலிமுகத்திடலில் இருந்தே கற்றோம் என எண்ண வேண்டாம் என்றார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X