2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பலாபலன் விரைவில் தெரியவரும்: மனோ

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது ஒரு மாதமாகவே அமைச்சராக என் கடமைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவைகளின் பலாபலன் விரைவில் தெரியவரும் என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். 

இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் ஷெலி வைடிங்க்கும் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சந்திப்பு, இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, 

முன்னைய ஆட்சிகளின் போதும் தமிழ் மொழியை சிங்கள மொழியுடன் இணைந்த சக ஆட்சி மொழியாக நடைமுறைபடுத்துவதற்கு அரச கரும மொழிக்கொள்கை, அரச கரும மொழி திணைக்களம், அரச கரும மொழி ஆணைக்குழு மற்றும் அமைச்சுடன் கூடிய அமைச்சரும் இருந்தும் தேவைப்பட்ட அரசியல் உறுதிப்பாடு இல்லாமல் இருந்தது. இன்று அந்நிலைமை மாறியுள்ளது. 

என்னிடமும், எமது அரசாங்கத்திடமும் இது தொடர்பில் தேவையான அரசியல் உறுதிப்பாடு  இருக்கின்றது. 

கனடாவில் ஆங்கில, பிரெஞ்சு மொழிகளுக்கு நடைமுறையில் வழங்கப்பட்டுள்ள சம அந்தஸ்த்துடன் கூடிய சமகால வரலாறு எங்களுக்கு பெரிதும் வழிகாட்டுகிறது. 

அரசாங்கத்தின் மொழியுரிமை கொள்கையை நடைமுறை படுத்துவது தொடர்பில் கனடிய அரசின் கடந்த கால ஒத்துழைப்புகள் மற்றும் உதவிகள் மேலும் அதிகரித்த அளவில் எமது அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.  

கனடிய உயர் ஸ்தானிக அரசியல்துறை பொறுப்பாளர் ஜெனிபர் ஹார்ட், தேசிய கலந்துரையாடல் அமைச்சின் செயலாளர் பேர்ல் வீரசிங்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் சமுகமளித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .