Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மே 06 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு நகரத்திலுள்ள, நவீன ரக வர்த்தக நிறுவனமொன்றில் பொருத்தப்பட்டிருந்த, தனியார் வங்கியொன்றுக்குச் சொந்தமான, தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்திலிருந்து (ATM), நாற்பது இலட்சத்து எழுபத்து ஏழாயிரம் ரூபா (40,77,000/=) பணம் திருடப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது, நீர்கொழும்பு, கடோல்கலே பிரதேசத்தில் அமைந்துள்ள, நவீன ரக வர்த்தக நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த குறித்த பண இயந்திரத்தை, வங்கி அதிகாரிகள் கணனி மூலம் பரீட்சித்துப் பார்த்தபோதே, மேற்படி தொகை பணம், மோசடி செய்யப்பட்டுள்ளமை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில், குறித்த வங்கி அதிகாரிகளால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, நீர்கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அதுகோரலவின் பணிப்புரையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குறித்த வர்த்தக நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த ‘சி.சி.டி.வி.’ கெமராவில் பதிவாகியுள்ள காணொளிகளின்படி, இந்தத் திருட்டுச் சம்பவம், கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி, இரவு வேளையில் இடம் பெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago