2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பட்டாசுத் தயாரிப்பு நிலையத்தில் விபத்து: ஒருவர் காயம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்  

நீர்கொழும்பு, கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாகொன்ன பிரதேசத்திலுள்ள பட்டாசுத் தயாரிப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிம்புலாபிட்டிய வீதி, தாகொன்ன பிரதேசத்தில்  அமைந்துள்ள 'சக்தி அனுமா' என்ற பட்டாசு தொழிற்சாலையில், நேற்றுக்  (28) காலை 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த நிலையத்துக்கு அருகில் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் புல் வெட்டும் இயந்திரமொன்றைப் பயன்படுத்தி புல் வெட்டிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று தொழிற்சாலைப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக, அவ் ஊழியரின் முகம் மற்றும் கைகளுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

கிம்புலாபிட்டிய, ஒரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த  திலான் இந்திக பெரேரா ((36 வயது) என்ற ஊழியரே காயமடைந்தவராவார்.

இவ்விபத்தினால் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

புத்தாண்டுக் காலத்தில் இயங்கிய குறித்த தொழிற்சாலை, தற்போது மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டானைப் பொலிஸார், விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .