Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 23 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இசெட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு மேயராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வர்ணகுல மோஸஸ் தயான் லன்ஸாவும் பிரதி மேயராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ.இசெட்.பரீஸ் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (23) காலை நடைபெற்ற வாக்கெடுப்பிலேயே, மேற்படி இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வாக்கெடுப்பானது, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சந்ராணி சமரகோன் தலைமையில், நீர்கொழும்பு மாநகர சபையின் கூட்ட மண்டபத்தில், இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீர்கொழும்பு மாநகர சபைக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இதில் பங்குபற்றினர்.
மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான வாக்கெடுப்பை மேல் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நடத்தினார்.
இரண்டு பதவிகளுக்கான வாக்கெடுப்புகளும் பகிரங்க வாக்கெடுப்பாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.
வாக்களிப்பின்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த வர்ணகுல மோஸஸ் தயான் லன்ஸா, 25 வாக்குகளைப்பெற்று மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரொயிஸ் பெர்னாந்துவுக்கு 19 வாக்குகள் கிடைத்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago