Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெனீவா தீர்மானம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள காணிகளை விடுவித்தல், மீள்குடியேற்றம், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல், கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஓர் ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட அரசியல் அமைப்பு வடிவத்தை எடுப்பதற்கு இடையூறாகவுள்ள விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டன.
இது தொடர்பாக ஆக்கபூர்வமான முடிவொன்றை எடுப்பதையிட்டு கலந்துரையாடுவதெனவும் தமிழரசுக் கட்சியிடம் கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாப்பு குறித்த தமிழரசுக் கட்சியின் யோசனைகள் தொடர்பாகவும் எதிர்வரும் 29ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூடி பேசுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சி மாநாட்டின்போது ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக கட்சிகள் சமர்ப்பிக்கவுள்ள யோசனைகள் தொடர்பாக கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகள் தனித்தனியே தமது யோசனைகளை சமர்ப்பிப்பதெனவும் அதற்கு முன்னதாக அந்த யோசனைகளை 29ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டமைப்பின் தலைவர்களின் சந்திப்பில் முன்வைத்து அது தொடர்பாக ஆராய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago