Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீ.எம். முக்தார்
துருக்கியின் முன்னாள் பிரதமர் அஹமட் டவ்டொக்லு, எதிர்வரும் 9ஆம் திகதி பேருவளைக்கு விஜயம் செய்கிறார்.
பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலில், அவருக்குப் பெருவரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவருமான அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் அழைப்பில் பேருவளைக்கு விஜயம் செய்யும் அவர், பல்வேறு வைபவங்களில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதற்கமைய, அன்றைய தினம் (09) மாலை 5 மணிக்கு, அப்ரார் அறக்கட்டளை ஏற்பாட்டில், பாடசாலை மாணவர்களுக்குப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் அவர், பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
இம்தியாஸ் பாக்கிர் மாகார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதேசத்திலுள்ள 3 பாடசாலைகளைச் சேர்ந்த 19 மாணவர்களுக்கு, இதன்போது புலமைப்பரிசில் வழங்கப்படுமென, அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் ஏ.டப்.எம். அஜ்வாத் தெரிவித்தார்.
பள்ளிவாசல் ஜமாத் சபைத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.ஏ.எம். ஹனபி உட்பட அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், பிரமுகர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
முன்னதாக அவர், பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்துக்கும் அன்றைய தினம் விஜயம் செய்வதோடு, கலாபீட மாநாட்டு மண்டபத்தில், பிற்பகல் 3.45 மணிக்கு “முஸ்லிம் புத்திஜீவிகளின் வகிபாகம்” என்ற தொனிப்பொருளில் உரையாற்றவுள்ளார்.
கலாபீட நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கலாபீட பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முகம்மத் (நளீமி) உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
41 minute ago
1 hours ago