Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Gavitha / 2016 மே 03 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
தமிழர்களின் உரிமையை நிலைநாட்டவும் தமிழ்த்தலைமைகளை சந்தோஷ-ப்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்களவர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கிறார்' என்று தெரிவித்த பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் ஆலோசகர் பியகம சுசில தேரர், 'தான் ஒரு சிங்களவர் என்று ஜனாதிபதி உணர்ந்தால், இனவாதக் கருத்துக்களை பரப்பும் சி.வி, சம்பந்தன் ஆகியோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'நாட்டில் தற்போது சிங்களவர்களுக்கான இடம் இல்லாமல் போகின்றது. காரணம் தமக்கு ஆதரவளித்த தமிழர்களுக்காக ஒட்டுமொத்த சிங்களவர்களையும் ஜனாதிபதி எதிர்க்கின்றார். வட, கிழக்கை பிரிப்பது தொடர்பில் சி.வி கூறும் கருத்துக்கு எதிராக யாரும் வாய்திறப்பதில்லை. எனவே, இந்நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்களவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என்று அவர் கூறினார்.
'முன்னாள் ஜனாதிபதியின் இராணுவ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டமையானது, கண்டிக்கத்தக்க விடயமாகும். 2001-2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் லக்ஷ்மன் கதிர்காமருக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது என்றால், முன்னாள் ஜனாதிபதிக்கு ஏன் இராணுவ பாதுகாப்பு வழங்க முடியாது. இவை அனைத்தும் தமிழர்களுக்காகவே செய்யப்படுகின்றது.
மஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்படக்கூடாது. இதற்குப் பின்னர், அவருடைய உயிருக்கு ஏதும் ஆபத்து நேர்ந்தால், அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
52 minute ago