Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களுடைய தந்தையை கவனித்துக்கொள்ள வேண்டுமாயின் மாதமொன்றுக்கு 2 இலட்சம் ரூபாயை, தருமாறு அவருடைய ஏழு மகள்களும் கோரியுள்ள சம்பவம் பாதுக்க பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
என்னுடைய ஏழு மகள்மார்களில் ஒருவர் கூட தன்னை கவனித்துக்கொள்வதில்லை என்றும் அவ்வாறு கவனித்துக் கொள்ளவேண்டுமாயின் மாதம் 2 இலட்சம் தருமாறு ஏழு மகள்மார்களும் கேட்கின்றனர் என 82 வயதான தந்தையொருவர் பாதுக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், அதனை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்து அந்த ஏழு மகள்களையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்தனர்.அவர்கள் அனைவரும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பது தெரியவந்தது.
பெற்றோர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய முறைமை தொடர்பில் அந்த ஏழு பெண்களுக்கும் தெளிவூட்டிய பொலிஸார், தங்களுடைய தந்தையை மாறி, மாறி கவனித்துக்கொள்ளுமாறும் அறிவுரை வழங்கினர்.
பொலிஸாரின் அறிவுரையை ஏற்றுக்கொள்ள மறுத்த ஏழு பெண்களும், தங்களுடைய தந்தையை கவனித்துக்கொள்ள வேண்டுமாயின் மாதாந்தம் 2 இலட்சம் ரூபாய் பணத்தை தரவேண்டுமென பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மகள்மார்கள் இரண்டு இலட்சம் ரூபாயை கோருகின்றனர். எனினும், அவ்வளவு தொகையை தன்னால் தரமுடியாது எனத் தெரிவித்துள்ள 82 வயதான தந்தை, தன்னிடம் எந்தப் பணமும் இல்லை. மாத்தறை ரொட்டும்ப பிரதேசத்தில் உள்ள காணியை விற்ற பணத்திலேயே தன்னுடைய சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மிகுதி இருந்த பணத்தில் 4 இலட்சம் ரூபாயை கடைசி மகளுக்கு கொடுத்துவிட்டேன். கடந்த காலங்களில் அவருடனேயே வாழ்ந்து வந்தேன். எனினும், அவரும், மருமகனும் தன்னையும் தன்னுடைய மனைவியையும் பாதுக்க பிரதேசத்தில் உள்ள வாடகை வீடொன்றில் வாடகைக்கு அமர்த்திவிட்டு சென்றுவிட்டனர். இதனால் தாங்கள் இருவரும் பெரிதும் பாதிக்கப்பட்டோம் என்றும் 82 வயதான தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்த பொலிஸார், பிரச்சினையை தீர்க்க முடியாமையால், நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை எனவும் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், தந்தை, தான் தற்காலிகமாக பார்த்துக்கொள்கின்றேன் என தெரிவித்த பிலியந்தலையை வசிப்பிடமாகக் கொண்ட மகள், அவரை அழைத்துச் சென்றுவிட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago