Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 06 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பெற்றோலுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. நீர்கொழும்பு - கொப்பரா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் பெற்றோலை பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
தளுபத்தை பிரதேசத்தில் உள்ள இன்று (06) முற்பகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகம் ஆரம்பமானது. நகரவாசிகள் மட்டுமன்றி தூர இடங்களில் இருந்தும் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக வாகன சாரதிகள் வருகை தருவதன் காரணமாக, இந்த இரண்டு நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
இது தொடர்பாக முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் நேற்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) முச்சக்கர வண்டி ஓட்டவில்லை. பெற்றோல் இல்லாமையே காரணம். இன்றைய தினம் பெற்றோலைப் பெறுவதற்காக மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக காத்துக்கொண்டு நிற்கிறேன். எமது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்க காலத்திலும் மக்கள் இதுபோல் பெற்றோலுக்காக வரிசையில் நின்றனர். நல்லாட்சியிலும் இதுவே நடக்கிறது. இங்கு அமைச்சர்கள் யாரும் வரிசையில் நிற்கவில்லை. வாக்களித்த மக்களே வரிசையில் நிற்கிறார்கள்” என்றார்.
கார் சாரதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பெற்றோலுக்காக மக்கள் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எரிபொருள் விநியோகம் தொடர்ந்து இடம்பெறாவிட்டால் அடுத்து வரும் இரண்டொரு தினங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். மக்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். நல்லாட்சிக்கு இது நல்லதல்ல” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago