2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 30 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொட - கல்லொழுவ, முஸ்லிம் கிராமப் பிரதேசத்தில், இன்று (30) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, டெங்கு நுளம்பு நடவடிக்கைகள், மினுவங்கொட பிரதான சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சஷீ பிரியதர்ஷனீ தலைமையில், வெற்றிகரமாக  முன்னெடுக்கப்பட்டதாக,  மினுவங்கொட சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் பத்தண்டுவன பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஆர்.எம்.எஸ்.ஆர். சமர திவாகர தெரிவித்தார்.

கல்லொழுவ - ஹிஜ்ரா மாவத்தை, ஜும்மா மஸ்ஜித் மாவத்தை, அழுத் மாவத்தை, தக்கியா வீதி, முனாஸ் ஹாஜி வத்தை, அண்ணாசி வத்தை ஆகிய பிரதேசங்களில் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

கல்லொழுவ கிழக்கு மற்றும் வடக்கு  பிரதேசங்களில்  மாத்திரம் டெங்கு நோய் தாக்கத்தினால் 54 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று  முழு நாளும் புகை விசிறும் பணிகளிலும் மற்றும் வீடு வீடாகச் சென்று சோதனை நடவடிக்கைகளிலும் 15 பணியாளர்கள் குழுக்கள்  ஈடுபட்டன

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது, மினுவங்கொட பொலிஸாரை முன்னிலைப்படுத்தி,  கனேமுல்ல மற்றும் மல்வத்து ஹிரிபிட்டிய பொலிஸாரின் உதவிகளும் பெறப்பட்டன.   

டெங்கு குடம்பிகளைத் தேடி, வீடு வீடாக தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதோடு, புகை விசிறும் பணிகளில் மினுவங்கொட பிரதேச சபை, திண்மக் கழிவு முகாமைத்துவப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .