Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 10:35 - 0 - 177
74 சுதந்திர தினமான நாளை (04) ரஞ்சன் ராமநாயக்க பூரணமாக விடுதலை செய்யப்படுவார் என தாம் உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவை இன்று (03) காலை சென்று பார்வையிட்டதன் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
"ஒரு கலைஞராக,அவர் கலைத் துறைக்கு பெரும் சேவை ஆற்றி வந்தார்.அவர் ஆற்றிய பொது சேவையை மேலும் வலுவாக முன்னெடுக்க அவரது கொடுப்பனவுகள், சம்பளம்,சலுகைகள்,வரப்பிரசாதங்கள் அனைத்தையும் பொதுச் சேவைக்கே அர்ப்பணித்த தலைவர் என்ற வகையில், நாளை அவர் முழுமையாக விடுதலை பெறுவார் என நம்புகிறோம்.
மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை அளித்து, மனிதாபிமானியின் பூரண விடுதலைக்காக அவரை நாளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன். மனித நேயத்திற்காகவே இந்த பரிந்துரையை முன்வைக்கிறேன்” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago