2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சீனன் கோட்டை ஷாதுலிய்யா கலாபீட பட்டமளிப்பு விழா - 2016

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை, சீனன் கோட்டை அல் ஜாமிஅதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட முதலாவது பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி முதல், சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளி வாசலில் நடைபெறும்.

கலாபீட நிர்வாக சபைத் தலைவரும் சீரேஷ்ட சட்டத்தரணியுமான அல் ஹாஜ் எம்.ஸி.எம் ஹம்ஸா தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சவு_தி அரேபியா புனித மதீனாவைச் சேர்ந்த சன்மார்க்க அறிஞர் அஸ்ஸெய்யித் அப்துர் ரஹ்மான் உமர் அல் ஜிப்ரி மௌலானா பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

கலீபதுல் குலபா அஷ்ஷாதுலி மௌலவி அல் ஹாஜ் ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி), அஸ்ஸெய்யித் அப்துல் காதர் மஷ்ஹூர் மௌலானா ஆகியோர் கௌரவ அதிதியாகக் கலந்துகொள்வார்கள்.

சீனன் கோட்டை பள்ளிச் சங்கத் தலைவர் அல் ஹாஜ் ராமிஜ் ஏ. கபூர், கொழும்பு உம்முஸாவியா நிர்வாக சபைத் தலைவர் தேசபந்து மக்கி ஹாஷிம் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொள்வார்கள்.

தென் இந்தியா சேலம் மாவட்டம் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் எம்.எம். அபூ தாஹிர் (பாகவி) அவர்கள் விசேட பேச்சாளராகக் கலந்துகொள்வார். மேலும், உலமாக்கள் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக கலாபீட முதல்வர் உஸ்தாத் மௌலவி எம்.ஏ.எம் அஸ்மிகான் (முஅய்யிதி) தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .