Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 15 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரசித்தி பெற்ற ஸ்ரீ மயூராபதி பத்திரகாளி அம்மன் ஆலய அறநெறிப் பாடசாலை மற்றும் லயன்ஸ் கழகம் (Kotahena west District 306 –B1) ஆகியன இணைந்து, மாணவர்களின் நலன்களை மையமாகக் கொண்டு, கல்விப் பொதுத் தராதர மாணவர்களுக்காக எதிர்வரும் தினங்களில் பரீட்சை செயலமர்வுகளை இலவசமாக நடத்தவுள்ளன.
வறிய மாணவர்களின் நலன்கருதி இலவசமாக நடத்தப்படும் இச்செயலமர்வில் இலவச கையேடுகள், பரிசில்கள் மற்றும் மதிய நேர உணவுகள் வழங்கப்படவுள்ளன.
எனவே, கல்விப் பொது தராதர சாதாரணதரம் கற்கும் மாணவர்கள், இதில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இச்செயலமர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் விவரங்களை முன் கூட்டியே அறியத்தர வேண்டும்.
இச்செயலமர்வு, ஸ்ரீ மயூராபதி அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, எதிர்வரும் 17ஆம் திகதி, 19ஆம் திகதி மற்றும் 21ஆம் திகதிகளில் இடம்பெறும்.
முதல் நாளான செவ்வாய்க்கிழமை (17), ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் விக்கி மாஸ்டரினால் விஞ்ஞான பாடநெறி விரிவுரைகளும், பட்டதாரியான ஆசிரியர் வை. சிவகுமாரினால் தமிழ்மொழியும் இலக்கணமும் பாடநெறிக்கான விரிவுரைகளும் நடத்தப்படவுள்ளன.
ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் த.மனோகரனினால் சைவ சமயப் பாடநெறிக்கான விரிவுரைகளும் ஆசிரியர் வேணுகாந்தனால் கணிதப்பாடநெறிக்கான விரிவுரைகளும், இரண்டாம் நாளான எதிர்வரும் வியாழக்கிழமை (19) நடத்தப்படவுள்ளன.
இறுதி நாளான எதிர்வரும் சனிக்கிழமை (21) BA(Hons)வாகிசா ஜெயராமச்சந்திரனினால் வரலாறு பாடநெறிக்கான விரிவுரைகளும் நடத்தப்படவுள்ளன. இவை தொடர்பான மேலதிக விவரங்களை 0755207907 என்ற அலைபேசியுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறியத்தரப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago