Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Kogilavani / 2017 மார்ச் 07 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில், எதிர்வரும் 10ஆம் திகதி, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக, இலங்கை மருத்துவச் சபை குறிப்பிட்டுள்ளது.
குறித்த கல்லூரி தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, மருத்துவச் சபையின் பதிவாளர் டெரன்ஸ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
மாலபே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த கல்லூரிக்கு, மருத்துவப் பட்டத்தை வழங்க அனுமதியளித்து, தீர்ப்பளித்தது. மேலும், அங்கு பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களை, வைத்தியர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பு குறித்து, இலங்கை மருத்துவச் சபை பெற்றுக்கொண்ட சட்ட அறிவுரைகளுக்கு அமைய, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக, டெரன்ஸ் டி சில்வா கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago