Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 நவம்பர் 08 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, பெட்லஸ் சைக்கிள் கழகம்; ஏற்பாடு செய்துள்ள சைக்கிள் சவாரி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு பெரியமுல்லையில் அமைந்துள்ள செனோரிச் ஓய்வு விடுதியில் சனிக்கிழமை(07) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை சைக்கிளோட்ட கழகத்தின் தலைவர் வைத்தியர் அமால் ஹர்ச சில்வா, இலங்கை சைக்கிளோட்ட கழகத்தின் உப தலைவர்களான நிஹால் குலசேகர, வில்மன் பெரேரா, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் சுனில் ரணசிங்க பிராந்திய போக்குவரத்தப் பிரிவின் பொறுப்பதிகாரி கே.எம்.யு. கஜநாயக்க, இலங்கையின் முன்னாள் தேசிய சைக்கிளோட்ட வீரர் பொனிபொஸ் பெரேரா, அனுசரணையாளர் பிரசன்ன டயஸ் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
எதிர்வரும் சனிக்கிழமை(14) காலை 8.30 மணியளவில் நீர்கொழும்பு மாநகர சபை முன்பாக சைக்கிள்; சவாரி ஆரம்பமாகவுள்ளது.
இதில் சைக்கிளோட்ட வீரர்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த வீர்ர்கள், சைக்கிள் சவாரியை விரும்புவோர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் அன்றைய தினம் காலை 7.45க்கு மாநகர சபைக்கு வரவேண்டும் எனவும், நீர்கொழும்பு நகரை சுற்றி 15 கிலோ மீற்றர் தூரத்துக்கு இந்த சவாரி இடம்பெறும் எனவும் இலங்கை சைக்கிளோட்ட கழகத்தின் தலைவர் வைத்தியர் அமால் ஹர்ச சில்வா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago