Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2017 ஜூலை 04 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீ.எம். முக்தார்
பேருவளை இக்ரா தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியின் 25ஆவது வருட பூர்த்தி விழாவும் 24ஆம் வருட சான்றிதழ் வழங்கும் வைபவமும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் 4.30 மணிக்கு, ஜாமியா நளீமியா கலாபீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக்ரா தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், சுகாதார, போசாக்கு மற்றும் சதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன், அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷீம் கௌரவ அதிதியாகவும் சவுதி அரேபியா, ஜித்தா இக்ரா நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி அவாட் எம். அதுபய்டி மற்றும் தாரிக் காமில் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஜாமியா நளீமியா கலாபீட பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முகம்மத் (நளீமி), இக்ரா தொழில் பயிற்சி நிறுவன பணிப்பாளர் வை.ஐ.எம். ரமீஸ் உட்பட பலர் இந்நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.
தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு, இக்ரா கலாபீட ஸ்தாபகர் மர்ஹூம் எம்.ஐ.எம். நளீம் ஹாஜியாரின் ஞாபகர்த்த பொன் சின்னமும் வழங்கப்படவுள்ளது.
மேலும், இக்ரா தொழில்நுட்ப பயிற்சி நிறுவன பரிபாலன சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் இதில் பங்குபற்றவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago