2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

சிறுநீர் கழித்த பொலிஸ் மீது பொலிஸார் தாக்குதல்

Editorial   / 2024 பெப்ரவரி 12 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரமொன்றில் சிறுநீர் கழிக்கச் சென்ற பொலிஸ் பரிசோதகரை கடுமையாக தாக்கியதாக பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகர் சிற்றுண்டிச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் உள்ள மரமொன்றின் அடியிலேயே சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார்

 

சுமார் 6 பேர் கொண்ட பொலிஸ் குழு தம்மை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியதாகவும் அவர்களில் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் பரிசோதகரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிரேஷ்ட அதிகாரி தம்மை கடுமையாக குற்றம் சாட்டியதாகவும் பொலிஸ் பரிசோதகர் செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் கடந்த 9ம் திகதி இரவு  பொலிஸ் சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து சிறுநீர் கழிப்பதற்காக  மரத்தடிக்கு சென்றதாக இந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .